திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா காவேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். காவேரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது காவேரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 24-ஆம் தேதி காவேரி தனது கடைசி மகளான ஆறு மாத குழந்தையை கேட்டு கணவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த செல்லையா தனது மனைவியை தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காலால் அவரது தலையை தண்ணீரில் அழுத்தி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் போலீசில் சரணடைந்து மனைவி தொந்தரவு அளித்ததால் ஆற்றல் மூழ்கடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.