காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் 193 கிலோ எடையை தூக்கி இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
84 கிலோ + 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி அவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார். 31 வயதான மீராபாய் . காயம் காரணமாக, சுமார் ஓராண்டுக்கு பிறகு போட்டியில் களமிறங்கி, 193 கிலோவை தூக்கி முதலிடம் பிடித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 04-வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் நடப்பாண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதையடுத்து அமீராபாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மீராபாய் 48 கிலோ எடைப்பிரிவில் இதற்கு முன்பு உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 02 காமன்வெல்த் பதக்கமும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.