இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில் இரண்டு வெவ்வேறு நபர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் நபர் 42 வயதுடையவர், இவர் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி தினமும் நடைப்பயிற்சி செய்கிறார். இவரது நோக்கம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும், மருத்துவரின் வழிகாட்டுதலுடன் ஒழுங்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுமாகும்.
மற்றொரு நபர் 24 வயதுடைய இளைஞர், இவர் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதற்காக ஓட்டப்பயிற்சியை மேற்கொள்கிறார். இவரது எண்ணம், இளம் வயதிலேயே உடற்பயிற்சி மூலம் உடலை வலுவாக வைத்திருப்பதும், மருத்துவரைச் சந்திக்கும் சூழலைத் தவிர்ப்பதுமாகும். இந்த இளைஞர் தனது ஆரோக்கியத்தைப் பேண ஓட்டப்பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, துடிப்புடன் அதைச் செய்கிறார்.
இந்தக் காணொளி, வெவ்வேறு வயதினரின் நோக்கங்களையும் எளிமையாக காட்டியதோடு ஆரோக்கியம் தான் உண்மையான சொத்து என எடுத்துரைத்துள்ளது.
View this post on Instagram
A post shared by Muhammad Talha : Social Media Strategist (@simply.ta1ha_)