சென்னை, ஆகஸ்ட் 26 : சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் (Chennai Metro Rail) உயர்த்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு தற்போது சென்னை மெட்ரோ ரயில்நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில கட்டணத்தில் உயர்வு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை மாறிவிட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் என பலரும் அன்றாடம் பயணித்து வருகின்றனர். இதனால், மெட்ரோ ரயில்களில் எப்போது கூட்டம் அலைமோதும். தற்போது, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதாவது, ப்ளூ லைனில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையும், க்ரீன் லைனில் சென்ட்ரலில் இருநது பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. தற்போது மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகளும் நடந்து வருகிறது. நவீன வசதிகளை கொண்டு தற்போது கட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து வருகிறது. மேலும், சில டிக்கெட்டுகளில் தள்ளுப்படியையும் அறிவித்து வருகிறது. இப்படியான சூழலில், சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன.
Also Read : 32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை மெட்ரோ கட்டணம் உயர்வா?மெட்ரோ டிக்கெட் விலை உயர்வு டெல்லியில், சென்னையில் அல்ல !
டெல்லியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மெட்ரோ ரயில் பயணத்திற்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான செய்தியில், சென்னை மக்கள் ஷாக் என்று தவறான தலைப்பை வைத்து தவறான செய்தி பகிரப்பட்டுள்ளது.
தவறான தகவலைப்… https://t.co/3yZLRxIpuX pic.twitter.com/HL7eilmBSD
— TN Fact Check (@tn_factcheck)
அதாவது, சென்னையில் மெட்ரோ கட்டணம் உயரப்போவதாகவும், மக்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பு பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “டெல்லியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, மெட்ரோ ரயில் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியில் சென்னை மக்கள் ஷாக் என தவறான தலைப்புகளுடன் செய்தி வெளியாகி உள்ளது. எனவே, சென்னையில் மெட்ரோ டிக்கெட் உயர்வு இல்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளது.
Also Read : நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க திட்டம்.. 3 பேர் மீது போனிகபூர் வழக்கு!
டெல்லியில் மெட்ரோ கட்டணம் உயர்வுதலைநகர் டெல்லியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. கிலோ மீட்டருக்கு ரூ.1 முதல் ரூ.4 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0 முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.11 ஆகவும், 12 முதல் 21 கி.மீட்டருக்கு ரூ.43 ஆகவும், 21 முதல் 32 கிலோ மீட்டருக்கு ரூ.54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.