உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்!
Seithipunal Tamil August 26, 2025 08:48 PM

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய முறையில்தீர்வு காணப்பட வேண்டும்,பொது மக்களுக்கு சரியான விளக்கங்களை ஒவ்வொரு மனுவிற்கும் அளிக்கப்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா,தெரிவித்துள்ளார்.


இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா,
இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 
திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறுநிலைகளில் பெறப்படும் மனுக்கள் நிலுவையில் உள்ளது குறித்து துறை வாரியாகஆய்வுக் மேற்கொண்டு, நிலுவைகளை விரைவாக ஆய்வு செய்து தீர்வு காணஉத்தரவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் நிலுவை
குறித்து துறைவாரியாக கேட்டறிந்தார்கள்.உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் நிலவரங்களைஇணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ள பதில்மனுவை அனைத்து நிலைகளிலும் துறைத் தலைவர் வரையில் கண்காணிக்கின்றனர்.மாவட்டத்திலுள்ள துறை அலுவலர்கள் மனுதாரருக்கு அளிக்கப்படும் பதில் மனுவைஉரிய முறையில் வழங்கி முடிக்க வேண்டும். பதில் மனு உரிய முறையில்வழங்கப்படவில்லை என கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ஆகவே துறைத்தலைவர்கள் ஒவ்வொரு மனுவினையும் அக்கறையுடன் சரி பார்த்துதீர்வு காண வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்களுக்கு காரணம் சரியான முறையில்
இருக்க வேண்டும். கடமைக்காக நிராகரிப்பு என வழங்க கூடாது. இதனை மனதில்
கொண்டு துறை அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனுவும் துறை தலைவர்கள் கண்காணிப்பில் முடிக்கப்பட
வேண்டும். கீழ்நிலை அலுவலர்கள் பதில் அளித்து விடுகிறார்கள் என இருந்து விடக்
கூடாது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் பிரிவிலிருந்தும் மனுதாரருக்கு தொடர்பு கொண்டு மனுவின் நிலைமைஆய்வு செய்கின்றனர். அதேபோன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும்கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மனுதாரரிடம் கேட்டறியப்படும். நிராகரிப்புசெய்யப்படும் மனுக்கள் உண்மை நிலை மனுதாரரிடம் ஆய்வு செய்யப்படும். மனுக்கள்

ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் தீர்வு காணப்படுவதும் துறைச் சார்ந்த
அலுவலரின் பொறுப்பாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
தீர்வு காணப்படும் மனுக்கள் பிரச்சனை இல்லை. ஆனால் நிராகரிக்கப்படும்
மனுக்களுக்கு உண்மையான தெளிவான பதில் வழங்கப்பட வேண்டும். ஆகவே
ஒவ்வொரு வாரமும் கூட்டத்திற்கு வருகை தரும் அலுவலர்கள் மனுவின் நிலையை
தெரிந்து கொண்டு கூட்டத்தில் பதிலளிக்க வேண்டும். அனைத்து மனுக்களுக்கும்
உரிய முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், நேர்முக
உதவியாளர் திரு.ஏகாம்பரம் (பொறுப்பு), தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி)
திருமதி.கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்திருமதி.மீனா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்திரு.அறிவுடைய நம்பி, நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.ரமேஷ் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.