Kaantha: துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பா?
TV9 Tamil News August 26, 2025 10:48 PM

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மலையாள நடிகர் மம்முட்டியின் (Mammootty) மகனான இவர், தனது தந்தையை போலவே சினிமாவில் கலக்கி வருகிறார். இவ்வாறு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கலக்கிவரும் துல்கர் சல்மானின் நடிப்பில், இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar). இதை இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான இப்படமானது, கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் காந்தா (kaantha).

இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்க, ராணா (Rana) மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானிற்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அதன்படி இப்படமானது வரும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 3 BHK படத்தைப் பாராட்டிய பிரபல கிரிக்கெட்டர்… நெகிழ்ந்த இயக்குநர்

காந்தா படக்குழு வெளியிட்ட டீசர் பதிவு :

One day, 5 million views 🤩 and counting🔥. Watch the first teaser of @kaanthafilm, out now on YouTube.

Tamil – https://t.co/PYsiBKCSQg

Telugu – https://t.co/N2fJUG5nPN

A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha pic.twitter.com/CX85YU989Y

— Wayfarer Films (@DQsWayfarerFilm)

2025 தீபாவளிக்கு வெளியாகிறதா காந்தா திரைப்படம் :

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் காந்தா. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரக்கனியும் நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 1970ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தி நடிகர் ராணா மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க : தளபதி விஜய்யுடன் ஒரே மேடையில் சூர்யா, அஜித் ரஜினிகாந்த்.? என்ன காரணம் தெரியுமா?

இந்த காந்தா படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகளிடையே வைரலாகி வந்தது. இதை அடுத்ததாக இப்படம் வரும் 2025, செப்டம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி வரும் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.