இங்கிலாந்தின் பெட்ஃபோர்டு பகுதியில் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் வானில் பறந்த ஒரு பெரிய வெப்பக் காற்று பலூன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஆரம்பத்தில் ஒரு வேடிக்கையான சவாரியாக தெரிந்த இந்த பயணம், காற்று செயலிழந்ததால் விரைவில் ஒரு பதற்றமான சூழ்நிலையில் மாறியது.
பலூனில் பயணித்தவர்கள், பெட்ஃபோர்டின் ரஸ்ஸல் பார்க் அருகே அவசரமாக தரையிறங்க முயன்றனர். சம்பவம் நடந்த போவரில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனே உதவியதால்தான் அந்த பலூன் வீடுகள் மற்றும் மின்கம்பிகள் மீது மோதாமல் பாதுகாப்பாக தரையில் இறங்கியது.
“>
இந்த அதிரடியான தருணம் சாமூக ஊடகங்களில் பரவியதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.பிரிட்டிஷ் பலூன் மற்றும் ஏர்ஷிப் கிளப்பும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பலூன் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் உறுதிபடுத்தியுள்ளது. “
.