மத்திய ஆசிய கால்பந்து சங்கம் சார்பில் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஈரான், ஆப்கானிஸ்தான் உட்பட 8 அணிகள் களம் இறங்குகின்றன. இந்த போட்டிக்கான இந்திய கால்பந்து அணியை புதிய தலைமை பயிற்சியாளர் காலித் ஜமில் நேற்று அறிவித்துள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். மூத்த வீரர் சுனில் சேத்ரிக்கு இடமில்லை.
இந்திய அணி கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சந்து, அம்ரிந்தர் சிங், ஹிரிதிக் திவார், பின்களம்: ராகுல் பெகே, நவ்ரெம் ரோஷன் சிங், அன்வர் அலி, சந்தேஷ் ஜிங்கான், சிங்லென்சனா சிங், ரால்டே, முகமது உவாய்
நடுகளம்: நிகில் பிரபு, சுரேஷ் சிங் வாங்ஜாம், டேனிஷ் பரூக் பட், ஜீக்சன் சிங், போரிஸ் சிங், ஆஷிக் குருனியன், உதாந்தா சிங், நவ்ரெம் மகேஷ் சிங், முன்களம்: இர்பான் யாத்வாட், மன்வீர் சிங், ஜிதின், லாலியன்சுவாலா சாங்தே, விக்ரம் பிரதாப் சிங்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?