இப்ப வர்ற படங்கள் வேஸ்ட்.. குப்பைகளை கொட்றாங்க.. வெளுக்கும் திருப்பூர் சுப்பிரமணியம்..
CineReporters Tamil August 27, 2025 02:48 AM

தமிழ் சினிமா தற்போது அழிவின் விளிம்பில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ் நடிகர்களும் ஒரு காரணம் என்று சொல்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். மேலும் அவர் கூறியதாவது,” தமிழ் சினிமா நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் இன்று தயாராக இல்லை. காரணம் அவர்கள் போட்ட பணத்தை எடுப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. இனி ஒரு நடிகர் 100 கோடி, 150 கோடி, 200 கோடி என்று சம்பளம் வாங்க முடியாது. ஏனென்றால் அப்படி அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து அதை எடுக்க தயாரிப்பாளர்கள் படாத பாடுபடுகின்றனர்.

”எதிலுமே லாபம் இல்லை. திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களின் படம் வந்தால் தான் அவர்களுக்கு தீபாவளி பண்டிகை மாதிரி உற்சாகம் வரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் படங்களும் போனியாகாமல் நஷ்டத்தை தருகிறது. நடிகர்களும் தங்களுடைய சம்பளங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அவர்களும் கொஞ்சம் இறங்கி வந்தால் தயாரிப்பாளர்கள் பயன்பெறுவார்கள். இல்லையென்றால் இனி படம் எடுக்க ஒரு தயாரிப்பாளரும் இருக்க மாட்டான்”.

”இப்போதைக்கு வெளியான 170 திரைப்படங்களில் 140 திரைப்படங்கள் எதற்குமே லாயக்கில்லாத திரைப்படங்கள். அந்தத் திரைப்படத்தால் பயனடைவது அந்த திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும்தான். அவர்களுக்கு வேலை கிடைக்குது அவ்வளவுதான். மத்தபடி அந்த திரைப்படங்களால் தியேட்டருக்கு பிரயோஜனமில்லை. அந்த மாதிரி படத்துக்கு ஆடியன்ஸ் உள்ளே வர தயக்கம் காட்டுகிறார்கள்”.

”ஒடிடி நிறுவனங்களும் அந்தப் படங்களை வாங்க மறுக்கிறார்கள். சாட்டிலைட் சேனல்களும் வாங்க மறுக்கிறார்கள். அப்போ பணம் போட்ட தயாரிப்பாளருக்கு எங்கிருந்து பணம் வரும். டோட்டல் லாஸ் தான். அந்த 140 திரைப்படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஏதோ சிறு சிறு வியாபாரம் செய்கிறவர்கள் மற்றும் தன் பையனை ஹீரோ ஆகணும்”,

சிலர் தன்னுடைய கௌரவத்திற்காக படம் எடுக்கறவங்க அப்படின்னு இவங்க தான் அதிகமா உள்வே வாராங்க. சினிமா பற்றி அவர்களுக்கு ஒரு அச்சாணியும் தெரிவதில்லை. இவர்களால் தான் சினிமா இண்டஸ்ட்ரி மொத்தமும் கெடுகிறது”. என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.