கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெலியான மஹிரா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் சைத்ரா ஆச்சார். இந்தப் படத்தை தொடர்ந்து கன்னட சினிமாவில் நடித்து வந்த நடிகை சைத்ரா ஆச்சார் கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான சப்த சாகரடாச்சே எல்லோர்: சைட் பி என்ற படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் கன்னட சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 3 BHK படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகை சைத்ரா ஆச்சார். இவர் இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை சைத்ரா ஆச்சார் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
ருக்மினி வசந்திற்கு வாழ்த்து தெரிவித்த சைத்ரா ஆச்சார்:இந்த நிலையில் கன்னட சினிமாவில் தன்னுடன் நடித்த நடிகை ருக்மினி வசந்திற்கு நடிகை சைத்ரா ஆச்சார் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீங்க எல்லாரும் மதராஸி டிரெய்லரைப் பார்த்தீங்களா? அருமையா இருக்கு என் அன்பான ருக்மினி, சிவகார்த்திகேயன் உங்கள் இருவரையும் திரையில் பார்க்க எனக்கு அவ்வளவு உற்சாகம். முழு படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று சைத்ரா ஆச்சார் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… 21 வயசுல என்ன நம்பி கத்தி படத்தை கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ் – அனிருத்!
நடிகை சைத்ரா ஆச்சார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:Have you all watched #Madarasi trailer yet???
It looks amazing!!!
My dearest @rukminitweets and @Siva_Kartikeyan , I can’t be more excited to watch you both on screen!❤️
Best wishes to the whole team! pic.twitter.com/acboqpxMVU— Chaithra Achar (@Chaithra_Achar_)
Also Read… யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு