நொய்டா வரதட்சணை கொலை வழக்கு.. கணவருக்கு கள்ளக்காதல் இருந்ததா?
Webdunia Tamil August 27, 2025 08:48 AM

நொய்டாவில் வரதட்சிணை கொடுமையால் கொல்லப்பட்ட நிகிதா என்ற பெண் வழக்கில், அவரது கணவர் விபின், வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விபின் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது, அவரது மனைவி நிக்கி அவர்களை பிடித்ததால், விபின் அப்பெண்ணை அடித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், விபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விபின் கள்ளக்காதலால் தான் விபினுக்கும் அவரது மனைவி நிகிதாவுக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளதாகவும் அந்த பிரச்சனை தான் ஒரு கட்டத்தில் வரதட்சணை வரதட்சனை கொடுமையாக மாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபுனுடன் கள்ள தொடர்பில் இருந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவரிடமும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.