கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில், இந்து அல்லாத ஒரு பெண் கோயிலின் குளமான ருத்திரதீர்த்தக் குளத்தில் கால் கழுவியும், புகைப்படம் எடுத்தும் வீடியோ வெளியிட்டதால் அந்த குளத்தில் பரிகார சடங்குகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், சமூக ஊடக பிரபலமுமான ஜாஸ்மின் ஜாஃபர் என்பவர் கோவில் மரபுகளை மீறி, குளத்தை தூய்மையற்றதாக ஆக்கியுள்ளதாக தேவஸ்வம் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக, இன்று காலை 5 மணி முதல் நண்பகல் வரை பக்தர்களின் தரிசனம் தடை செய்யப்பட்டது. இன்று மதியம் குளத்தை புனிதப்படுத்தும் சடங்குகள் நடக்கும் என்றும், அது முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஆறு நாட்களுக்கு முன் வெளியிட்ட ஜாஃபர், பின்னர் அதை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். தனக்கு இந்த விதிகள் பற்றித் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Siva