Rajini: இன்று ரவிமோகன் அவருக்கு சொந்தமான ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அந்த ஸ்டூடியோவிற்கு ரவிமோகன் ஸ்டூடியோ என்றே பெயர் வைத்திருக்கிறார். இந்த ஸ்டூடியோ திறப்பு விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ரவியை வாழ்த்தினார்கள். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவிமோகன். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார் ரவிமோகன். இடையில் அவருடைய திருமண உறவில் விரிசல் ஏற்பட அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவருடைய தோழி கெனிஷாவுடனான நட்புதான் இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட காரணம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது எதை பற்றியும் ரவிமோகன் கவலைப்படவே இல்லை.
இப்படி செய்தி வெளியான பிறகுதான் கெனிஷாவுடன் அவர் அடிக்கடி வெளியில் சுற்றுவது அதிகமாக தெரிகிறது. எங்கு போனாலும் இருவரும் ஒன்றாக போகிறார்கள். சமீபத்தில் கூட திருப்பதி கோயிலுக்கும் ரவிமோகனும் கெனிஷாவும் சேர்ந்துதான் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர். இந்த நிலையில்தான் தனியாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் ரவிமோகன்.
இதன் மூலம் இந்த வருடம் இரண்டு படங்களை தயாரிக்க போவதாக கூறியிருக்கிறார். அதில் முதல் படம் யோகிபாபுவை வைத்து தயாரிக்க போகிறாராம். இதில் நடிகர் கார்த்திக்கும் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். ரவிமோகன் ஸ்டூடியோவைப் பற்றி கார்த்தி கூறும் போது ‘இந்த தயாரிப்பு பக்கமே நான் போகல. எல்லாரும் அட்வைஸ் பண்ணாங்க. ஏன் ரஜினி சாரே தயவு செய்து தயாரிப்பு மட்டும் வேணானு அட்வைஸ் பண்ணாரு. இருந்தாலும் ரவிமோகனின் இந்த முடிவு பாராட்டுக்குரியது.’
‘ நல்ல முறையில் வெற்றியடைய வேண்டும்’ என கார்த்தி கூறினார். ஏற்கனவே ரஜினி படத்தை தயாரித்து அவர் பட்ட பாடு என்ன என்பது அனைவருக்குமே தெரியும். அதனால்தான் கார்த்திக்கும் இப்படி ஒரு அட்வைஸை கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய அண்ணன் சூர்யா புரடக்ஷன் கம்பெனி ஆரம்பித்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்துகொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.