கணவன் மீது விழுந்த 100 கிலோ மனைவி.. மாரடைப்பு ஏற்பட்டு பலியான கணவர்.. சோக சம்பவம்!
TV9 Tamil News August 26, 2025 05:48 PM

கம்பன்ஹா, ஆகஸ்ட் 26 : போர்ச்சுக்கல் (Portugal) நாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கணவர் மீது அவரது மனைவி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் மனைவி 100 கிலோ உடல் எடை கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மனைவி மேலே விழுந்ததும் மூச்சு பேச்சிண்றி கிடந்த கணவரை அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.

கணவன் மீது விழுந்த 100 கிலோ மனைவி – பலியான கணவன்

போர்ச்சுக்கல் நாட்டின் கம்பன்ஹா பகுதியை சேர்ந்தவர் 59 வயது ஆண். அவருக்கு 60 வயது மனைவி உள்ளார். மனைவி சுமார் 100 கிலோ எடை கொண்டு இருப்பதால், மனைவி மேலே கட்டிலிலும், கணவன் கீழே தரையிலும் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று மேலே கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி படுக்கையில் இருந்து எழுந்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தனது கணவர் மீது விழுந்துள்ளார்.

இதையும் படிங்க : சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 5 பேர் பலி!

மூச்சு பேச்சின்றி கிடந்த கணவர்

தான் 100 கிலோ எடை கொண்டிருந்ததால் அவரால் மேலே எழுந்திருக்க முடியவில்லை. மனைவி அதிக உடல் எடை கொண்டிருந்ததால் அவராலும் எழுந்திருக்க முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக படுக்கைக்கும், சுவருக்கும் இடையே இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அதனை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை தூக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களாலும் முடியாத நிலையில், அவர் கஷ்டப்பட்டு நகர்ந்து கணவரை பார்த்துள்ளார். அப்போது அவர் மூச்சுத்திணறி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து.. 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் உடல் கருகி பரிதாப பலி!

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறிய மருத்துவர்கள்

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்ட அந்த பெண், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த நிலையில், தன்னால் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணுக்கு தற்போது மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.