மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையொட்டி, ஆண்டுதோறும் சிறந்த பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து திருப்பூர் உடுமலை பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளியின் ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் ஆகியோர் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.
விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகையும் செப்டம்பர் 5 அன்று வழங்கப்படவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.