குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் ஹிந்து அல்லாத பிற மதத்தை சார்ந்த பெண் ஒருவர் கால் கழுவியதால் நாளை (ஆகஸ்ட் 26) சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் (புஷ்கரணி), ஹிந்து அல்லாத பெண் ஒருவர், கால் கழுவுவதை காட்டும் ஒரு ரீல்ஸ் எடுத்து, அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது மத விதிமுறைகளை மீறும் செயல் என்று கண்டிக்கப்பட்டதோடு, பொதுமக்களின் கொந்தளிப்புக்கு வழிவகுத்தது. இதனை தொடர்ந்து அந்த பதிவை நீக்கிய அந்தப் பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து, குருவாயூர் தேவஸ்தானம் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் நாளை (ஆகஸ்ட் 26) சுத்தம் செய்யப்பட்டும் சடங்குகள் நடைபெறவுள்ளது. இதை ஒட்டி கோவிலின் தரிசனம் அதிகாலை 05 மணி முதல் நண்பகல் வரை கட்டுப்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. மேலும், சடங்குகள் முடிந்த பிறகு மாலையில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும், இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தேவஸ்தானம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.