தேசிய புலனாய்வு துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வயது வரம்பு:- 18 முதல் 27 வரை. வயது தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்/ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்/ கணினி பொறியியல்/ கணினி பயன்பாடு ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* எலெக்ட்ரிக்கல்/கணினி அறிவியல்/ இயற்பியல்/ கணிதம் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) அல்லது கணினி பயன்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு (BCA) முடித்திருக்க வேண்டும்.
அடிப்படை சம்பளம்: ₹25,500 முதல் அதிகபட்சம் ₹81,000 வரை
சிறப்பு பாதுகாப்புத் தொகையாக அடிப்படை சம்பளத்தில் கூடுதலாக 20% வழங்கப்படும். விடுமுறை நாட்களில் பணியாற்றினால் தனியாக கூலி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1.எழுத்துத் தேர்வு (Written Exam)
2.திறன் தேர்வு & நேர்காணல் (Skill Test & Interview)
3.மருத்துவ பரிசோதனை (Medical Examination)
முதலில் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிகமாகவே பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:- இந்தப் பணிக்கான விண்ணப்பத்தை https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். விண்ணப்பம் ஆகஸ்ட் 23 தேதியே தொடங்கிய நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.