நாளை முதல் இந்தியா மீது 50% வரி! என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? - ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்!
WEBDUNIA TAMIL August 27, 2025 06:48 AM

நாளை முதல் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதிக்கும் நிலையில் இந்திய நிறுவனங்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “இந்த வரிவிதிப்பால் ரத்தின கற்கள், நகைகள், ஜவுளி ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிப்பை சந்திக்கலாம். இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் தேவையான பொருளாதார ஆதரவை வழங்கும்.

இதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளை தரும் என்றும், இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது என்றும் நம்புகிறோம்.

இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் உள்ளது. அடுத்த 11 மாத இறக்குமதிக்கு இது போதுமானது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.