Pakistan Flood Warning: ஜம்முவில் கனமழை.. பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் வெள்ள எச்சரிக்கை விடுத்த இந்தியா..!
TV9 Tamil News August 27, 2025 07:48 AM

டெல்லி, ஆகஸ்ட் 26: ஜம்முவில் (Jammu Rains) தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமாகி வருகிறது. ஜம்முவில் பெய்யும் கனமழை பாகிஸ்தானிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இந்தநிலையில், தவி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை (India Warns Pakistan) அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு, தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மனிதாபிமான கண்ணோட்டத்தில் இந்தியா 3 முறை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:

தவி நதி தோடா மாவட்டத்தில் உள்ள படேர்வாவில் உள்ள கைலாஷ் குண்ட் பனிப்பாறையிலிருந்து உருவாகி உதம்பூர் மற்றும் ஜம்மு மாவட்டங்கள் வழியாக சென்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்டிற்கு செல்கிறது. தற்போது, நதியின் நீர் மட்டம் 12 அடியில் பாய்கிறது. இந்த நீர் மட்டம் 17 அடி அபாயக் குறியை விட ஐந்து அடி கீழே உள்ளது.

ALSO READ: மாடுகளுக்கு பதிலாக பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி.. வெறுமையின் கொடுமை!

ஜம்முவில் மேக வெடிப்பு:

2025ம் ஆண்டு ஜம்முவில் பெய்த கனமழையால் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 65 பேர் கிஷ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் யாத்திரையின்போது ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். நாளை அதாவது ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்றும், மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு ஜம்மு, ராம்பன் மற்றும் கிஷ்த்வார் துணை ஆணையர்கள், மலையேற்றம் அல்லது மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, கதுவா மாவட்டத்தில் உள்ள சேஹர் காட் பகுதியில் உள்ள ஒரு இடிந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலை-44 இல் கதுவா மற்றும் சம்பா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஜம்மு பிரிவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சண்டிகரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – 30 பேர் பத்திரமாக மீட்பு

இந்தியா எச்சரிக்கை:

India’s “flood warning” to 🇵🇰 was issued via Indian High Commission, not under the #IndusWatersTreaty. This is treaty violation by stealth. Such bad-faith tactics erode trust in #IWT and demand scrutiny by the World Bank & international courts.#Pakistan #WaterWars @WorldBank… pic.twitter.com/zmx0qOQpe9

— Dr Atia Ali Kazmi (@dratiaalikazmi)


கிடைத்த ஆதாரங்களின்படி, இந்தியா தனது தூதரகம் மூலம் வெள்ள எச்சரிக்கையை, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரம் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இருப்பினும், மனிதாபிமானம் அடிப்படையில் இந்தியா பாகிஸ்தானுக்கு ஒரு முறை அல்ல, 3 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.