ஏ.என்.எம்களுக்கு கைக்கணினிகளை வழங்கிய முதலமைச்சர்!
Seithipunal Tamil September 02, 2025 02:48 PM

சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் சார்ந்த விபரங்களை நிகழ் நேர அடிப்படையில் (Real Time)  சேகரித்து பதிவேற்றுவதற்கு வசதியாக 220 ஏ.என்.எம்களுக்கு தலா சுமார் ரூ.20,000 மதிப்புள்ள கைக்கணினிகளை (Tablets) முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். 

சபாநாயகர் செல்வம், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் மற்றும் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.

 

 புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகத்சிங் வீதி மிகவும் சேதம் அடைந்தும் சிதலமடைந்தும் உள்ளது என்று அப்பகுதி மக்கள் மேற்கண்ட பகத்சிங் வீதியை   புதிதாக சிமெண்ட் சிமெண்ட் சாலையாக  அமைத்துக் கொடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்..

பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று  சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக.  2024 - 2025. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 26 லட்சத்து 75 ஆயிரம் செலவில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் புதுச்சேரி நகராட்சி மூலம்  துவங்குவதற்கான பூமி பூஜை விழா..... 01.09.2025... திங்கள்கிழமை இன்று காலை 9:30 மணி அளவில் மேற்கண்ட பகத்சிங் வீதியில் உருளையன்பேட்டை   தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான திரு. G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.... 

விழாவில் புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் திரு.சிவபாலன் உதவி பொறியாளர் திரு.நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் திரு.குப்புசாமிஒப்பந்ததாரர் திரு.இளங்கோவன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் முக்கிய பெரியோர்களும்  உருளையன்பேட்டை தொகுதி  மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகளும், பிரமுகர்களும், மகளிர்களும், இளைஞர்களும்  பலர் கலந்து கொண்டனர்.... 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.