கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து ர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 12000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 32000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிகளில் குளிக்கவும் பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9,828 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 29,360 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையிலிருந்து, பாசனத்திற்கு 23,300 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.தற்போது அணையின் நீர்மட்டம் 118.86அடியாகவும், நீர் இருப்பு 91.66 டிஎம்சியாக உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?