நாடு முழுவதும் கடந்த 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொட்டபல்லாபூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் ஒன்பது
பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து விநாயகர் சிலை ஊர்வலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், விபத்து ஏற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.