தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா, வரும் செப்டம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் இந்த விழா, தமிழகம், வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கியமான அம்சம் – அம்மன், காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் பூண்டு பக்தர்கள் கடவுளிடம் நேரடியாக அர்ப்பணிக்கிற வழிபாடாகும்.
இந்தநிலையில், வேடங்கான பக்தர்களுக்காக அணிகலன்கள், கயிறுகள், வேட ஆடைகள் , நகைகள், குறிப்பாக கிரீடங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிரீடங்களை தயாரிக்கும் கைவினைஞர்கள் தொடர்ந்து ஆடம்பரமான வடிவங்களில் கிரீடங்களை உருவாக்கி வருகிறார்கள்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வேடம் பூண்டு வருவார்கள் என்பதால், கிரீடங்களுக்கும் பெரிதும் தேவை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வர்த்தகர்கள், பக்தர்கள் ஆகியோர் பெருமளவில் வருவார்கள் என்பதால் குலசேகரப்பட்டினம் பகுதியில் விழா பொலிவாகவே மாறி வருகிறது.