பொதுவாக நம் எலும்புகளை நாம் ஆரோக்கியமாக வைத்து கொள்ள அதுக்கென்று சில உணவுகளை எடுத்து கொள்வது நலம் ,அந்த வகையில் எலும்பு பலவீனத்தால் வரும் முதுகு வலிக்கு என்ன சிகிச்சை தரலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.நம் உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் உணவுகளில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற பொருட்களை சேர்க்க கொள்ள வேண்டும்.
2.கொலஸ்ட்ராலை குறைக்க கொழுப்பு சத்து இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.
3.அடுத்து எலும்பின் வலிமையை மேம்படுத்த கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்
4.சிலருக்கு முதுகு வலியிருக்கும் ,இந்த முதுகு வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் சூடான குளியல் மேற்கொள்வது நல்லது.
5.இந்த சூடான குளியல் முதுவலியை கட்டுபடுத்துவதோடு உடலுக்கு உற்சாகத்தையும் வழங்கும்.
6.அடுத்து முதுகு வலி நீங்க கடுகு எண்ணெய் பெரிதும் உதவும்
7.முதுகு வலியை குறைக்கவும் எலும்புகளை வலுவாக்கவும் கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடக்க வேண்டும்.
8.பொதுவாக இந்த கடுகு கடுகு எண்ணெய் எலும்பின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது