பஞ்சாப் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழைக்கான அலெர்ட் விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 27 முதல் 30 வரை அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விடுமுறையானது அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?