இந்தியாவுடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியை வரவேற்றுள்ள ஜெய்சங்கர்..!
Seithipunal Tamil September 04, 2025 11:48 AM

அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதனிடையே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான ஜோஹன் வடேபுல்லை சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியின் முடிவை பாராட்டுகிறோம் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஜோஹன் வடேபுல்லை சந்தித்த பிறகு நிருபர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: இருவரின் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்றும்,  பொருளாதாரம், பருவநிலை மாற்றம், பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா உடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியின் முடிவையும், ஏற்றுமதி கட்டுப்பாட்டு விஷயங்களையும் சரி செய்யும் அந்நாட்டினை  பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் செமி கண்டக்டர் துறையில் ஜெர்மனி ஒத்துழைக்க விரும்புவது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,  பசுமை ஹைட்ரஜன் துறையில் ஒத்துழைக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியமானது. இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் கூறுகையில், இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.