முதியவரை எஸ்.ஐ. தள்ளி விட்ட விவகாரம் - காவல்துறை விளக்கம்
Top Tamil News September 05, 2025 09:48 PM

ராணிப்பேட்டை, சாத்தூரில் நடந்த `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் வெங்கடாபதி என்ற முதியவரை SI பிரபாகரன் தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில்  சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன்  ஸ்டாலின்  முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற  முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாட்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற  உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற  சென்ற  முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும்  தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார். இதனால் கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும்  பெரியவர்  வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறை மூலம் மிரட்டியுள்ளனர்.  காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை  மார்பில் குத்தி விரட்டியடித்து காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ராணிப்பேட்டை, சாத்தூரில் நடந்த `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் வெங்கடாபதி என்ற முதியவரை SI பிரபாகரன் தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், முதியவர் வெங்கடாபதி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, VAO-வை தாக்கினார், நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கட்டுப்படுத்தவே குறைந்த அளவு பலத்தைக் கொண்டு வெங்கடாபதியை SI அமைதிப்படுத்தினார் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.