Amit Mishra Retires: 25 ஆண்டு கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி..! ஓய்வை அறிவித்தார் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா!
TV9 Tamil News September 05, 2025 11:48 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) ஓய்வுக்கு பிறகு, இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் 3 வடிவ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல, இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ராதான். இதன்மூலம், அமித் மிஸ்ரா (Amit Mishra) இப்போது தனது 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐபிஎல்லில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையை அமித் மிஸ்ரா படைத்துள்ளார். ஐபிஎல்லில் இவ்வாறு செய்த ஒரே பந்து வீச்சாளர் இவர்தான்.

ஓய்வை அறிவித்த அமித் மிஸ்ரா:

ஓய்வு குறித்து அமித் மிஸ்ரா வெளியிட்ட பதிவில், “25 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். இந்த விளையாட்டுதான் எனது முதல் காதலாகவும், ஆசிரியராகவும், மகிழ்ச்சியின் மிகப்பெரிய மூலமாகவும் இருந்து வருகிறது. இந்தப் பயணம் எண்ணற்ற உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. கிரிக்கெட்டில் இந்த 25 ஆண்டுகள் எனக்கு மிகவும் மறக்க முடியாதவை. பிசிசிஐ, நிர்வாகம், ஹரியானா சங்கம், துணை ஊழியர்கள், என் சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறுகிறேன்.

ALSO READ: டி20 போட்டிகளில் ஓய்வு.. மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பால் அதிர்ச்சி!

எனது பயணத்தை மேலும் சிறப்பானதாக்கிய அவர்களின் அசைக்க முடியாத அன்பு மற்றும் ஆதரவுக்கு ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். கிரிக்கெட் எனக்கு எண்ணற்ற நினைவுகளையும் விலைமதிப்பற்ற பாடங்களையும் கொடுத்துள்ளது. மேலும், மைதானத்தில் செலவழித்த ஒவ்வொரு தருணமும் நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் ஒரு நினைவாக மாறியுள்ளது.” என்றார்.

அமித் மிஸ்ராவின் வாழ்க்கை வரலாறு:

Today, after 25 years, I announce my retirement from cricket — a game that has been my first love, my teacher, and my greatest source of joy.

This journey has been filled with countless emotions — moments of pride, hardship, learning, and love. I am deeply grateful to the BCCI,… pic.twitter.com/ouEzjU8cnp

— Amit Mishra (@MishiAmit)


அமித் மிஸ்ரா 2003ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரில் சர்வதேச அளவில் அறிமுகமானார். 2008ம் ஆண்டு மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அமித் மிஸ்ரா அறிமுகமானார். இந்தப் போட்டியில், அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2013ம் ஆண்டு, ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜவகல் ஸ்ரீநாத்தின் உலக சாதனையை அமித் மிஸ்ரா சமன் செய்தார். 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் அமித் மிஸ்ரா விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ: 11 ரசிகர்களின் மரணம்! 20 பேர் காயம்! 3 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த விராட் கோலி

அமித் மிஸ்ரா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளும், 36 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகளும், 10 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அமித் மிஸ்ரா கடைசியாக 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியிலும், அதே ஆண்டில் கடைசி டெஸ்ட் போட்டியையும், 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார்.

இது மட்டுமல்லாமல், அமித் மிஸ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையானது கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை விட நீண்டது. சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை நவம்பர் 16, 2013 அன்று முடித்தார். அதே நேரத்தில் அமித்தின் வாழ்க்கை 25 ஆண்டுகள் நீடித்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.