மிலாது நபி, ஓணம் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறை முன்னிட்டு ஏராளமானூர் தென் மாவட்டதை நோக்கி படை எடுகின்றனர்.
மிலாது நபி, ஓணம் பண்டிகை மற்றும் தொடர் 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வார விடுமுறை கழிக்க தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரம் என்பதால் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து அதேபோல் கார், இருசக்கர வாகனம் என அனைத்து வகையான வாகனத்திலும் மக்கள் தற்போது ஒரே நேரத்தில் தென் மாவட்டத்தை நோக்கி செல்வதால் கிளாம்பாக்கம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கின்றன. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் தற்பொழுது போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.