“இதுதான் காலத்துக்கும் அழியாத உண்மையான காதல்”… ரயிலில் வயதான தம்பதியினர் செய்த இதயத்தை தொட்ட செயல்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!!
SeithiSolai Tamil September 05, 2025 11:48 PM

சமூக வலைதளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில மட்டுமே இதயத்தை தொடும். அப்படியொரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதிய தம்பதியர் இடம்பெற்றுள்ளனர்.

கோயம்புத்தூரில் இருந்து பயணித்த ஜிஷ்மா உன்னிகிருஷ்ணன் என்பவர் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவெளியிட்டதை தொடர்ந்து இப்போது வேகமாக பரவி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1.17 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by 𝐉𝐢𝐬𝐡𝐦𝐚 (@jishma_unnikrishnan)

நெட்டிசன்கள் இந்த வீடியோவை ‘உண்மையான காதலின் உதாரணம்’ என புகழ்ந்து, தம்பதியருக்கு தங்கள் அன்பை கமெண்டுகளில் பொழிகின்றனர்.

வீடியோவில், ரயிலின் பொதுப்பெட்டியில், பக்கவாட்டு இருக்கைகளில் அமர்ந்திருக்கும் முதிய தம்பதியை காணலாம். அடுத்த சில நொடிகளில், கணவர் மிகுந்த பாசத்துடன் தனது மனைவிக்கு புதிய கொலுசு அணிவிக்கிறார்.

அப்போது மனைவியின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி பார்ப்பவர்களை உருக வைக்கிறது. இதை பகிர்ந்த ஜிஷ்மா, “நானும் இந்த ரயிலில் பயணித்தேன், ஆனால் ஒரு சாதாரண தருணத்தில் வாழ்நாள் காதலின் சாட்சியாக மாறினேன்” என குறிப்பிட்டார்.

“வயது ஆனாலும் காதல் அழியாது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்ய, “இதுதான் உண்மையான காதல்” என மற்றொருவர் புகழ்ந்தார். “மிகவும் அழகான தருணம்” என இன்னொரு நெட்டிசன் உருக்கமாக பதிவிட்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.