உதயநிதியிடம் ரூ.29 கோடி, துரைமுருகனிடம் ரூ.30 கோடி! வெளியானது அமைச்சர்களின் சொத்துமதிப்பு
Top Tamil News September 06, 2025 10:48 AM

அதிக சொத்துக்கள் வைத்துள்ள திமுக அமைச்சர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அமைச்சர்களில் 87% பேரின் மீது குற்ற வழக்குகளும், அதில் 45% பேரின் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன.

அதன்படி, இந்திய அளவில் 65 வது இடத்திலும் தமிழகத்தில் முதலிடத்திலும் இருப்பது 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அமைச்சர் காந்தி. இவரின் வயது 75. இவரது சொத்து மதிப்பு ரூ.47.94 கோடி, இவர் மீது 3 குற்ற வழக்குகளும், 3 தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இரண்டாம் இடத்தில் இருப்பவர் அமைச்சர் டிஆர்பி ராஜா. 44 வயதுடைய இவரது சொத்துமதிப்பு ரூ.41.81 கோடி, இவர் PG படித்திருந்தாலும், இவர் மீது 2 தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. மூன்றாம் இடத்தில் பழனிவேல் தியாகராஜன் உள்ளார். வயது 55. டாக்டருக்கு படித்துள்ள இவரது சொத்து மதிப்பு ரூ.38.89 கோடி. 4 குற்ற வழக்குகள் உள்ளன. நான்காவது இடத்தில் இருப்பவர் அமைச்சர் துரைமுருகன். 83 வயதுடைய இவரது சொத்துமதிப்பு ரூ.30.80 கோடி, இவர் PG படித்திருந்தாலும், இவர் மீது 8 குற்றவழக்குகளும், 2 தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. 

43 வயதுடைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிக சொத்துக்கள் வைத்துள்ள திமுக அமைச்சர்களின் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.29.07 கோடி. இளங்கலை படித்துள்ள இவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆறாவது இடத்தில் இருப்பவர் அமைச்சர் எ.வ.வேலு. 71 வயதுடைய இவரது சொத்துமதிப்பு ரூ.23.32 கோடி, இவர் PG படித்திருந்தாலும், இவர் மீது 7 குற்றவழக்குகளும், 2 தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன.  அமைச்சர் சாமிநாதன் ரூ.21.07 கோடி சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்தில் உள்ளார். 57 வயதுடைய இவர் இளங்கலை படித்துள்ளார். இவர் மீது 3 குற்றவழக்குகளும், 2 தீவிர குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ரூ.15.32 கோடி சொத்துகளுடன் அமைச்சர் ரகுபதி எட்டாவது இடத்தில் உள்ளார். இவருடைய வயது 70. முதுநிலை அறிவியல் படித்துள்ள இவர் மீது 23 குற்றவழக்குகள் உள்ளன. 9 வது இடத்தில் அமைச்சர் முத்துசாமி உள்ளார். 71வயதுடைய இவரது சொத்து மதிப்பு ரூ.13.68 கோடி. முதுநிலை அறிவியல் படித்துள்ள இவர் மீது 9 குற்றவழக்குகள் உள்ளன. 10வது இடத்தில் ரூ.13.55 கோடி சொத்துகளுடன் சிவசங்கர் உள்ளார். இவர் மீது 46 குற்ற வழக்குகளும், 7 தீவிர குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.