அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் - விஜய் வாழ்த்து..!
Top Tamil News September 06, 2025 02:48 PM

தவெக தலைவர் விஜய், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், "அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள். எம் கொள்கைத் தலைவர் காமராசரின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள். ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.