தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் ஸ்ரீ. இவர் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மாநகரம் என்று திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் திடீரென்று அவர் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் போதைக்கு அடிமையானது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மிகவும் அழகாக மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.