சப் இன்ஸ்பெக்டர் வெறித்தனமாய் தாக்கிய போலீஸ் ஏட்டு... பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
Dinamaalai September 06, 2025 04:48 PM

சப்-இன்ஸ்பெக்டர் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்திய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சியில் வசித்து வருபவர் விஜயகுமார் (40). கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் மீது அவரது தாய் மலர்கொடி, தனது மகன் சொத்து பிரச்சினை காரணமாக தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  


அதன் பேரில் ஆண்டிமடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து ஆகஸ்ட் 28ம் தேதி விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் இருந்த விஜயகுமார் திடீரென  காவல் நிலையத்திற்கு சென்றார். 

பின்னர் அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷை ஆபாசமாக திட்டி, சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் தகாத செயலில் ஈடுபட்ட ஏட்டு விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.