மகிழ்ச்சி...!முதல் டெஸ்லா காரை பெற்ற இந்திய வாடிக்கையாளர்...!
Seithipunal Tamil September 06, 2025 11:48 AM

கடந்த ஜூலை மாதம், உலக முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிராவின் மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்தது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலாக திறப்பு நடந்தது.

மேலும், மும்பை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராகவும், உயர் வருமான வாடிக்கையாளர்கள் மற்றும் மேம்பட்ட EV சார்ஜிங் கட்டமைப்புகளுடன் முக்கிய மின்சார வாகன சந்தையாகவும் இருக்கிறது.

இதன் காரணமாக தான், டெஸ்லா தனது முதல் கிளையை மும்பையில் அமைத்தது.இது மின்சாரத்தில் இயங்கும் டெஸ்லா கார்களின் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் வசதியான சார்ஜிங் திறன் விசேஷமானவை.

இந்நிலையில், மும்பை பாந்தரா பகுதியில் இருக்கும் ஷோரூமில் இன்று டெஸ்லா விற்பனையை தொடங்கி, முதல் காரை வாடிக்கையாளருக்கு வழங்கி மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர் நாயக் தொடங்கி வைத்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.