Madharasi Review:மதராஸி படம் எப்படி இருக்கு? நச்-னு சொன்ன ஷாலினி… இது போதுமே
CineReporters Tamil September 06, 2025 11:48 AM

Madharasi Review:சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். மெயின் வில்லனாக இந்த படத்தில் வித்யூத் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

ஒரு ஆக்சன் திரில்லர் படமாகவே இது ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்தது. துப்பாக்கி படம் எப்படி விஜய்க்கு ஒரு மாஸ் ஹீரோ ஆக்கிய திரைப்படமோ அதைப்போல சிவகார்த்திகேயனுக்கும் இந்த படம் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்து இருக்கிறார்கள். படம் வெளியாகி இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் ஒரு சில பேர் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தை பார்க்க தன்னுடைய மனைவியுடன் சத்தியம் திரையரங்கிற்கு வந்திருந்தார். கூடவே ஷாலினி அஜித்தும் இந்த படத்தை பார்க்க அதே திரையரங்கிற்கு வருகை தந்தார். படத்தை பார்த்ததும் ஷாலினியிடம் மதராசி திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற ஒரு கேள்வியை பத்திரிக்கையாளர்கள் முன்வைத்தனர்.

அதற்கு ஷாலினி நான் இந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணேன். சூப்பர் என சொல்லிவிட்டு சென்றார். ஆனால் ஒரு சில பேர் இந்த படத்தை பற்றி தவறான வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர். படம் நன்றாக இல்லை என்றும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் எங்களை வச்சு செய்து விட்டார் என்றும் பல பேரு கூறி வருகின்றனர். இது எல்லா படங்களுக்கும் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு தான்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.