“ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி”- செங்கோட்டையன்
Top Tamil News September 08, 2025 05:48 PM

தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். செங்கோட்டையனுக்கு ஆதரவாக  அதிமுக தலைமைக்கழக உறுப்பினர் பதவி மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிகளை முன்னாள் எம்பி சத்யபாமா ராஜினாமா செய்தார். அடுத்த நிமிடமே அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.


இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்றும், இன்றும் தொடர்ந்து என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.