Coolie Movie Collection: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் கூலி. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருந்தார். மேலும் சௌபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலரும் நடித்திருந்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் கேமியோ வேடத்தில் அமீர்கான் நடித்திருந்தார்.
லோகேஷுடன் ரஜினி கூட்டணி அமைத்ததால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவானது .படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படம் 500 கோடி வியாபாரத்தை தொட்டது. எனவே இப்படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என பலரும் சொன்னார்கள். ஆனால் படம் வெளியான முதல் நாள் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது.
குறிப்பாக படத்தில் லாஜிக் இல்லை, கதை திரைக்கதை அழுத்தமில்லை, எதிர்பார்த்தது வேறு ஆனா படத்தில் இருப்பது வேறு, கதை திரைக்கதையை லோகேஷ் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்றெல்லாம் பலரும் விமர்சனம் சொன்னார்கள். குறிப்பாக அதிக ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் டிஜிட்டல் இன்ஃபுளூயன்சர்ஸ் பலரும் கூலி படத்திற்கு எதிராக விமர்சனம் செய்தார்கள்.
ஒருபக்கம் இப்படத்திற்கு சென்சார் போர்டு A சர்டிபிகேட் கொடுத்தது. இதனால் குழந்தைகளுடன் அதாவது குடும்பத்துடன் சென்று பலராலும் படம் பார்க்க முடியவில்லை. இதுவும் வசூலை பாதித்தது. ஆனாலும் முதல் வாரம் இப்படம் நல்ல வசூலை பெற்றது. இரண்டாவது வாரத்தில் இருந்து வசூல் குறைய தொடங்கியது.
தற்போது படம் வெளியாக 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கூலி படம் 600 கோடி வசூலை தொட்டிருக்கிறது. இதற்கு முன் ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களும் 600 கோடி வசூலை தாண்டியது. தற்போது மூன்றாவதாக கூலி 600 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இப்படி கோலிவுட்டில் மூன்று முறை 600 கோடி வசூலை கொடுத்த நடிகராக ரஜினி இருக்கிறார். ரஜினியின் போட்டி நடிகராக பார்க்கப்படும் விஜய் இந்த ரெக்கார்டை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.