எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் திமுகவுக்கு பெரும் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே என்றும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை கடுமையாக விமர்சித்தார். “ஏற்கனவே நான்கு முறை வெளிநாடு சென்றுள்ளார். இப்போது ஐந்தாவது முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களின் மொத்த விளக்கமும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில், முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மட்டுமல்லாமல், உடனடியாக அவை செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய திமுக அரசு, “ஒப்பந்தம் போட்டவுடனேயே தொழில் தொடங்கியது” என்ற வகையில் பொய் செய்திகள் பரப்புகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.