ஆஸ்திரேலியாவில் கணவனை கொல்ல மனைவி நடத்திய விருந்தில் கணவன் எஸ்கேப் ஆகிவிட பரிதாபமாக மாமியார், மாமனார் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்தவர் சைமன் பேட்டர்சன். இவரது மனைவி எரீன் பேட்டர்சன். இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை மூண்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியாக வசிக்கத் தொடங்கி விட்ட நிலையில் குழந்தை யாருக்கு என்பதி வாக்குவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில் எரீன் ஒரு விருந்து தயாரித்து சைமன், அவரது பெற்றோர் மற்றும் சைமனின் அத்தை, மாமா உள்ளிட்டோரை விருந்துக்கு அழைத்துள்ளார். ஆனால் எரீனை பார்க்க விருப்பமில்லாத சைமன் அந்த விருந்துக்கு செல்லவில்லை. அதனால் மற்றவர்கள் சென்ற நிலையில் விருந்தை சாப்பிட்டதும் மயங்கி விழுந்தனர்.
இதில் சைமனின் தாய், தந்தை மற்றும் அத்தை பலியான நிலையில், சைமனின் மாமா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் எரீன் தான் தயாரித்த உணவில் விஷத்தன்மை மிக்க காட்டுக் காளானை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து எரீனுக்கு நீதிமன்றம் வெளியே வர முடியாத அளவுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K