அண்ணன் எடப்பாடி பழனிசாமி, மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர நான்காண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த பொறுப்பை சிறப்பாக செய்தார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையை திறம்பட கையாண்டு இன்று அமெரிக்கா நம்முடன் நட்பு பாராட்டுவதற்கு இறங்கி வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் திறமையான செயல்பாடு தான் காரணம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி, மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர நான்காண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த பொறுப்பை சிறப்பாக செய்தார். தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும்.
நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. தமிழகத்திலும் நடக்கிறது. இந்தியா முழுவதுமே காசு கொடுத்துத்தான் வாக்குகளை வாங்குகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் பழனிசாமி தனது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டார்.” என்றார்.