தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீங்கள் நினைக்காத கூட்டணியெல்லாம் அமைய வாய்ப்பிருக்கிறது எனக் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த டிடிவி தினகரன், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். இதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் தான், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை நயினார் நாகேந்திரன் தூக்கிப்பிடிப்பதால் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக விளக்கம் அளித்தார். மேலும் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு போதிய முக்கியத்துவத்தை பாஜக அளிக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமமுக, ஓபிஎஸ் வெளியேறியது பாஜக கூட்டணிக்கு பெரிய சறுக்கல் என்றே கூறலாம்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,“விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம், எத்தனையோ பேர் பயப்படுகின்ற சூழலில் மக்கள் விரும்புகின்ற நடிகர் விஜய், துணிச்சலாக கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு இப்போதே 15 சதவீத வாக்கு இருக்கிறது என்று பத்திரிக்கையாளர்களே சொல்கின்றனர். அதனை பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நீங்கள் நினைக்காத கூட்டணியெல்லாம் அமைய வாய்ப்பிருக்கிறது. அ.ம.மு.க இடம் பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.