தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இவர் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.அதிமுக குறித்து அவர் “அதிமுக கோமா நிலையில் உள்ளது” எனக் கூறினார்.
மேலும் ” இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான கட்சியின் உட்கட்சி பூசல்கள், தேர்தல் தோல்விகள் மற்றும் ஆழ்த்தப்பட்ட அரசியல் நெருக்கடிகளை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இபிஎஸ் நேற்று “ தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் பெரிய முதல் கட்சிகள், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையேதான் நேரடி போட்டி, 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெல்லும்” எனக் உறுதி அளித்துள்ளர். இன்று செய்தியாளர் சந்திப்பில் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்ற இபிஎஸ் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு, ”எந்த கட்சியாவது தேர்தலில் தோற்போம் என சொல்வார்களா?
எங்களை வசைபாடும் அண்ணாமலை கூட மக்கள் தளத்தில் திமுக ஆட்சி வலுவாக உள்ளதாக கூறியுள்ளார். 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார், 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கலாம். திமுகவை வசைபாடிய அண்ணாமலையே திமுக வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?