இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய இயக்குனர் என்றாலும் சரி, எவ்வளவு பெரிய நடிகரின் படம் என்றாலும் சரி ஈசியாக ட்ரோல் செய்து விடுகிறார்கள். மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள், ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என யாரும் இதிலிருந்து தப்ப முடியாது. அதற்குக் காரணம் இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. மீம்ஸ் கிரியேட்டர்கள் நிறைய வந்து விட்டார்கள். சிரிப்பை வரவழைக்கும் படியும் மீசைகளை உருவாக்கி ரசிக்க வைக்கிறார்கள்.
இதுவரை ட்ரோலிலும், மீம்ஸிலும் வராத மணிரத்தினமே தக் லைப் படத்தின் மூலம் ட்ரோலில் சிக்கி மீம்ஸில் வந்தார். படம் நன்றாக இருந்தால் விட்டு விடுவார்கள். படத்தில் லாஜிக் இல்லாமல், கதை சரியில்லாமல் இருந்தால் ட்ரோல் செய்து மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள். இது தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் நடந்திருக்கிறது. எந்த நடிகரும் இதிலிருந்து தப்ப முடியாது.
இந்நிலையில்தான் சமீபத்தில் வெளியான மதராஸி படமும் ட்ரோலில் சிக்கி இருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் இந்த படத்தின் கதை என்னவென்றால் சாதி மதத்தால் பிளவுபடுத்த முடியாத தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்து பிளவை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கும்பல் நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு இதனால் என்ன லாபம்? அவர்களை இயக்குபவர்கள் யார் என்பது பற்றி எந்த டீட்டெயிலும் முருகதாஸ் சொல்லவில்லை. இதையே பலரும் கலாய்த்து வருகிறார்கள். இந்த படம் முழுக்க துப்பாக்கித் தொடர்பான காட்சிகள் வருகிறது.
நிறைய காட்சிகளில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் லாஜிக் பல இடங்களில் இல்லை. இந்நிலையில்தான் இதை ஒருவர் மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார். டாக்டர் படத்தில் ‘இந்த மூஞ்செல்லம் வியாபாரம் ஆகாது என ஒரு காமெடி காட்சி வரும். அந்த காட்சியை வைத்து ‘ஸ்கூல் பையன் சிவகார்த்திகேயனை சுட்டான் சாகல.. சிவகார்த்திகேயன் வித்யூத்த சுட்டான் சாகல.. வித்யூத் ருக்மணிய சுட்டான் சாகல.. என்னடா துப்பாக்கி இது?’ என கலாய்த்து இருக்கிறார்கள்..
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மதராஸி திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடி வசூலை பெற்றது. ஆனால், 4 நாளான நேற்றே படத்தின் வசூல் குறைந்துவிட்டது. இப்போதே பல தியேட்டர்களிலும் காத்து வாங்குகிறது. இந்த வாரத்தை மதராஸி படம் தாண்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.