தமிழ்நாட்டில் நாளை இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
நாளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ள நிலையில் சட்டவிரோதமாகவோ அல்லது கள்ளச் சந்தையிலோ மதுபானம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.