முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ஆளுனர்களுக்கு 10 ஆண்டு சிறை: பாகிஸ்தானில் பரபரப்பு..!
WEBDUNIA TAMIL September 11, 2025 05:48 AM

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 17 ஆதரவாளர்களுக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம், இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின்போது உச்ச நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு, தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் அமைச்சர்களான யாஸ்மின் ரஷீத், மியான் மெஹ்மூத் ரஷீத், முன்னாள் ஆளுநர் ஒமர் சர்ப்ராஸ் சீமா மற்றும் இஜாஸ் சௌதரி ஆகியோரும் அடங்குவர். அதே சமயம், இந்த வழக்கிலிருந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி உட்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு வன்முறைப் போராட்டங்களின்போது, இம்ரான் கானின் 10,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.