நேபாளத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடி, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை பதவியை விட்டு நீக்கிய இளைஞர்கள், தங்கள் வெற்றியைத் தலைநகர் காத்மாண்டுவில் கொண்டாடி வருகின்றனர். இந்த போராட்டங்கள், ஊழலுக்கு எதிரான வெற்றியாகவும், ஒலியின் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, இளைஞர்கள் தங்களுக்கு இனி எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், “நேபாளத்தில் மோடி போன்ற ஒருவர் பிரதமராக வேண்டும். இந்தியாவின் மோடி போன்ற அரசு இங்கு இருந்தால், நேபாளம் முன்னேற்றம் அடையும். கே.பி. ஒலி எங்களுக்குத் தேவையில்லை. அவர் எங்கே இருந்தாலும் அவரை தேடி பிடித்துக் கொன்றுவிடுவோம்’ என்று ஆவேசமாக தெரிவித்தனர்.
கே.பி. ஒலி பதவி விலகிவிட்ட போதிலும், நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒலியின் அரசாங்கம் கவிழ்ந்துவிட்டதில் கொஞ்சம் மகிழ்ச்சி தான். நேபாளத்தில் இனிமேல் மோடி போன்ற ஒரு அரசு இங்கு வரவேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த இளைஞர்கள், தங்கள் கொண்டாட்டத்தின்போது, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மோடி போன்ற ஒரு வலுவான தலைமை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஊழலுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்து, ஒரு தலைவரை பதவியில் இருந்து நீக்கியது, நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம். இருப்பினும், அவர்களின் கோரிக்கையான மோடி போன்ற ஒரு தலைவர் நேபாளத்தின் பிரதமராக வருவாரா? என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஏற்கனவே அமெரிக்கர்கள், மக்களை விரும்பும் மோடி போல் ஒரு அதிபர் வேண்டும் என சில நாட்களுக்கு முன் கூறிய நிலையில் தற்போது அண்டை நாடான நேபாளத்தினரும் மோடியை புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: Bala Siva