“டாக்ஸி புக் செய்த மாணவி”… ஓடும் காரில் வைத்து அத்துமீறிய கொடூரம்… பட்டப் பகலில் நடந்த பகீர்… பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil September 11, 2025 03:48 AM

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 22 வயது மாணவி ஒருவருக்கு, ஒரு கேப் பயணம் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக மாறியது. பெங்களூரு பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி, செப்டம்பர் 8-ஆம் தேதி காலேஜ் செல்ல ஆன்லைன் மூலம் ஒரு கேப் புக் செய்தார். கேபில் புறப்பட்ட பிறகு, ஓட்டுநர் சங்கர் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக நடந்துகொண்டு, பின்னர் கேபுக்குள் அவரை அச்சுறுத்தும் வகையில் உடலைக் காட்டும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

மாணவி பயத்தில் கேபிலிருந்து வெளியேறி ஓடி தப்பியதைத் தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மோரிஸ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் 48 வயதான சங்கரை கைது செய்து, அவரது கார் மீது ஃபொரென்ஸிக் மற்றும் குற்றப்புலனாய்வு குழு ஆய்வு நடத்தி ஆதாரங்களை சேகரித்துள்ளனர். சங்கர் மால்ககஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது ஏற்கனவே சில புகார்கள் இருந்ததற்கான தகவல்களும் விசாரணையில் வெளியாகியுள்ளன. இது குறித்து காவல்துறையினர் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.