ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி, இந்திய பந்துவீச்சின் மிரட்டலை சமாளிக்க முடியாமல் 13.1 ஓவர்களில் 57 ரன்னில் முறியடிக்கப்பட்டது.
இலக்கை விரட்டத் தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் ஒரு விக்கெட்டை இழந்தாலும், 4.3 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில், அமீரகத்தை 57 ரன்னில் முடித்த இந்தியா, 4.3 ஓவர்களில் இலக்கை எட்டியதன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிவேக சேசிங் சாதனையை படைத்துள்ளது.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டு துபாயிலேயே ஸ்காட்லாந்துக்கு எதிராக 6.3 ஓவர்களில் இலக்கை விரட்டியதே இந்தியாவின் வேகமான சேசிங் சாதனையாக இருந்தது. அதை முறியடித்து, இந்த ஆட்டம் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.