கடந்த 2013-ல் தெலுங்கில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் அவர் நடித்தது அனைவரும் அறிந்ததே.
அதோடு, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
அண்மையில் அவரை மையமாகக் கொண்டு வெளிவந்த ‘மசாக்கா’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்போது தமிழ், தெலுங்கு இரு மொழித் திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ரிது, ரசிகர்களால் ‘மாடர்ன் மகாலட்சுமி’ என்று அழைக்கப்படுகிறார்.
எப்போதுமே கவர்ச்சி காட்சிகளைத் தவிர்த்து வந்த இவர், தன்னுடைய நலம் விரும்பிகளின் ஆலோசனையை ஏற்று, “இனி சற்று வித்தியாசமாக கவர்ச்சி தோற்றத்திலும் நடித்து பார்க்கலாம்” என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, வருங்கால படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்கவும், முன்னணி ஹீரோக்களின் மசாலா படங்களில் குத்தாட்ட பாடல்களிலும் கலக்க தயாராக உள்ளாராம்.மேலும், “சிறந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ரிது வர்மா” என நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் வட்டாரம் வதந்தி பரப்பி வருகிறது.